நற்றிணை 11 பெய்யாது வைகிய கோதை

 

 

             நற்றிணை 11 பெய்யாது வைகிய கோதை


பாடியவர் : உலோச்சனார்  

திணை   : நெய்தல்

கூற்று    : காப்பு மிகுதிக்கண் இடை ஈடுபட்டு ஆற்றாளாய தலைமகட்கு

தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது

கூற்று விளக்கம் : மிகுதியால் காவல் மிகுதியால் தலைவனைக் கூடப்

பெறாமல் ஆற்றாது வருந்திய தலைவியை நோக்கி நோக்கி நீ வருந்தாதே

நிலவு விரிந்ததனால் அவர் இன்னே வருவர் என்று கூறுவாள் போன்று

காவல் மிகுதியால் இரவுக்குறி பிறந்தும் அதனாலே தலைவி படும் துன்பமும்

சிறந்த தலைவன் கேட்டு வரைவது புகுமாறு கூறுவது

பாடல்

பெய்யாது வைகிய கோதை போல

மெய் சாயினை, அவர் செய் குறி பிழைப்ப;

உள்ளி நொதுமலர் நேர்பு உரை தெள்ளிதின்

வாரார் என்னும் புலவி உட்கொளல்

ஒழிகமாள நின் நெஞ்சத்தானே;      5

புணரி பொருத பூ மணல் அடைகரை,

ஆழி மருங்கின் அலவன் ஓம்பி,

வலவன் வள்பு ஆய்ந்து ஊர,

நிலவு விரிந்தன்றால் கானலானே.


பொருள் :தலைவியே, தலைவன் செய்த குறியானது இடையீடுபட்டுத் தவறுதலால்

சூடப்படாமல் கிடந்த மாலையைப் போல உடம்பு வாடிக்  கிடந்தாய் . மேலும் அயலவர்

பழிச்சொல்லை கருதி இனி திண்ணமாக அவர் நம்மிடத்தில் வருவார் அல்லர் என்னும் மன

வேறுபாட்டை  உண்டாக்கிக் கொள்ளாதே. வந்து வந்து மோதிய மணலை அடுத்து கடற்கரை

இடத்தில் தலைவர் ஊர்ந்து வருகின்ற தேரின் உருளையில் படாதவாறு நண்டுகளை விலக்கி

விலக்கித் தேர்ப்பாகன் வாரைப் பிடித்து ஆராய்ந்து செலுத்துவதற்கு ஏதுவாக  நிலவொளி

படர்ந்து இருந்தது.அலவனுக்கு  ஊறு  ஏற்படாதவாறு தேர் செலுத்தபடுவது போன்று  தலைவி

பழிச்சொல்லால் வருந்ததாத வண்ணம் வரைந்து கொள்வான் என்கிறாள் .

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்