நற்றிணை 06 நீர் வளர் ஆம்பற்
நற்றிணை 06 நீர் வளர் ஆம்பற்
பாடியவர் : பரணர்
திணை
: குறிஞ்சி
கூற்று : இரவுக் குறிப்பாற் பட்டு ஆற்றானாய தலைவன், தோழி
கேட்ப ,
தன் நெஞ்சிற்குச்
சொல்லியது
நீர் வளர் ஆம்பற் தூம்புடைத்திரள் கால்
நார் உரித்தன்ன மதன் இல் மாமை,
குவளை அன்ன ஏந்து எழில் மழைக் கண்,
திதலை அல்குல்,
பெருந் தோள், குறுமகட்கு
எய்தச் சென்று செப்புநர்ப் பெறினே, 5
'இவர் யார்?' என்குவள் அல்லள்; முனாஅது,
அத்தக் குமிழின் கொடு மூக்கு விளை கனி
எறி மட மாற்கு வல்சி ஆகும்
வல் வில் ஓரி கானம் நாறி,
இரும் பல் ஒலிவரும் கூந்தல்
பெரும் பேதுறுவள், யாம் வந்தனம் எனவே
பொருள்:
நீரில் வளர்கின்ற அல்லியின் உள்ளே துளையை உடைய திரண்ட
தண்டினை
நார் உரித்தார் போன்று பசலை படர்ந்த மாநிறம் . குவளை
போன்ற குளிர்ந்த
திதிலை உடைய அல்குல். பெரிய தோள் ஆகியவற்றை
கொண்ட
இளம் பெண்ணாகிய தலைவியிடம் நெருங்கச் சென்று என்
வருகையை
நினையாமல் சொல்வார் இருப்பின் அவரை நோக்கி இவர் யார்
என்று
அவள் கேட்க மாட்டாள். வழியிலேயே உள்ள குமிழ் மரத்தின்
வளைந்த
மூக்கு உடைய கனிகள் கீழே உதிர்ந்து அங்கு குதித்து
விளையாடும்
மானுக்கு வெறுப்பில்லாத உணவாகும். வல்வில் ஓரியின்
காடுபோல்
மனம் வீசுவதும் கருமையாய் திரண்டு தழைத்ததும் ஆகிய
கூந்தலை
உடைய தலைவி யாம் வந்துள்ளேன் என்று தெரிந்தால்
மகிழ்ச்சியால்
பெரிதும் மயக்கமடைந்து விடுவாள். அப்படிச் என்று
கூறுவாரை
யாம் பெறவில்லையே.
கருத்துகள்
கருத்துரையிடுக