நற்றிணை 02 அழுந்துபட வீழ்ந்த பெருந்

 ற்றிணை 02  அழுந்துபட வீழ்ந்த பெருந் 

பாடியவர் : பெரும்பதுமனார்

திணை       :  பாலை

கூற்று     :உடன் போகா நின்றாரை  

இடைச்சுரத்துக் கண்டார் சொல்லியது .

 

அழுந்துபட வீழ்ந்த பெருந் தண் குன்றத்து,

 

 

ஒலி வல் ஈந்தின் உலவைஅம் காட்டு,

 

 

ஆறு செல் மாக்கள் சென்னி எறிந்த

 

 

  செம் மறுத் தலைய, நெய்த்தோர் வாய,

 

 

  வல்லியப் பெருந் தலைக் குருளை, மாலை,5

 

 

மான் நோக்கு இண்டு இவர் ஈங்கைய சுரனே;

 


வை எயிற்று ஐயள் மடந்தைமுன் உற்று

 


எல்லிடை நீங்கும் இளையோன் உள்ளம்,

 


காலொடு பட்ட மாரி

 

 

மால் வரை மிளிர்க்கும் உருமினும் கொடிதே10

பொருள்பொருள் 

பொருள் : மிக ஆழமாக அழுந்திக் கிடக்கின்ற குளிர்ச்சியையுடைய

குன்றம் . அந்தக் குன்றத்தில் ஈச்ச மரங்கள் தழைத்து இருக்கின்றன .

ஈச்சங்காட்டில் காற்றுச் சுழன்று வீசுகின்றது . அக்காட்டு வழியே செல்லும்

மக்களுடைய தலையை புலிக் குட்டிகள் மோதுகின்றன. அதனால் அப்புலி

க்குட்டிகளின் தலைகளில் சிவப்புக் கரை பட்டது . வாயெல்லாம் குருதிக்

கரை படிந்தது .மாலை நேரத்தில் புலிக்குட்டிகள் தம் பதுங்கி இருக்கும்

மரல் தூறிலிருந்து நிமிர்ந்து  பார்க்கும். அக்காட்டில் இண்டங்கொடிகளும்

ஈங்கை  மரங்களும் இருக்கும் . இப்படிபட்ட காட்டில் இரவுப் பொழுதில்

கூர்மையான பற்களை உடைய மென்மைத் தன்மை வாய்ந்த பெண்ணை

முன்னே விட்டு பின்னே தொடர்கின்ற இந்த இளையவன் உள்ளம்

காற்றோடு கலந்து பொழியும்  மழையில் பெரிய கற்களைப் புரட்டுமாறு

இடிக்கின்ற இடியைக் காட்டிலும் கொடியது .

 

கூற்று  விளக்கம் : தலைவனும் தலைவியும் ஒருப்பட்டெழுந்து சுரத்து

இடைச் செல்லக்கண்டவர்  , இக்கொடும் சுரத்தில் மென்மைப் பண்புடைய

இவளைக் கொண்டு செல்லும் இந்த இளையவன் உள்ளம் இடியைக்

காட்டிலும் கொடிது என்று கவலைப்பட்டுக் கூறியது .


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்