நற்றிணை 01 நின்ற சொல்லர்; நீடுதோறு இனியர்;

 

 

நற்றிணை 01 நின்ற சொல்லர்; நீடுதோறு இனியர்;

பாடியவர் : கபிலர்

திணை   : குறிஞ்சி

கூற்று    : பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைவி சொல்லியது .

 

நின்ற சொல்லர்; நீடுதோறு இனியர்;

என்றும் என் தோள் பிரிபு அறியலரே'

தாமரைத் தண் தாது ஊதி, மீமிசைச்

சாந்தில் தொடுத்த தீம் தேன் போல,

புரைய மன்ற, புரையோர் கேண்மை;

5

 

நீர் இன்று அமையா உலகம் போலத்

தம் இன்று அமையா நம் நயந்தருளி,

நறு நுதல் பசத்தல் அஞ்சிச்


சிறுமை உறுபவோ? செய்பு அறியலரே!

 


தோழீ ! நம் காதலர் நிலைமை தவறாத வாய்மையுடையவர்; நெடிதாகத்

தோன்றுகின்ற இனிமையுடையவர்; எப்பொழுதும் என் தோள்களைப் பிரிதல்

என்பதை அறியாதவர் . அத்தகைய சிறந்தவருடைய நட்பு,  தாமரையின்

குளிர்ந்த மகரந்ததினை ஊதி , உயர்ந்த சந்தனத்தின் தாதினையும் ஊதி,

அந்தச் சந்தன மரத்திதின் உச்சியில் சென்று  வைத்த இனிய தேன் போல

உறுதியாக உயர்ந்தது. தண்ணீர் இல்லாமல் இவ்வுலகம் அமையாது. அது

போல அவர் இல்லாமல் நாம் இல்லை . நம் மீது மிகுந்த விருப்பம்

கொண்டவர் அவர் . அவர் பிரிந்தால் நம்  நெற்றியில்  பசலை படரும் .

அவ்வாறு பசலை படர்வதற்கு  அஞ்சி  தடுமாற்றம் அடைவாரோ ?

அடையமாட்டார் . (இனியும்  அவர் பிரியா கருத மாட்டார் என்பது முடிபு )


கூற்று விளக்கம் : தலைவன் பிரியக்  கருதியது  அறிந்த தோழி  தலைவி 

இடத்துக் கூறுதலும் , தலைவி அவர் இல்லாமல்  அமையாத என்னை

வருந்தும் படி விட்டுபிரிக்கின்ற  அன்னதொரு   குணக்குறைபாடு

இல்லாதவர் எனத் தலைவனை புகழ்ந்து கூறுவது .

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்