நற்றிணை 03 ஈன் பருந்து உயவும்
நற்றிணை 03
பாடியவர் : இளங்கீரனார்
திணை : பாலைபாடியவர்
: இளங்கீரனார்
கூற்று : முன் ஒரு காலத்துப் பொருள் வயின்
பிரிந்த
தலைமகன் பின்னும்
பொருள் கடைக் கூட்டிய நெஞ்சிற்குச்
சொல்லியது.
ஈன் பருந்து உயவும் வான் பொரு நெடுஞ்
சினைப்
பொரி அரை வேம்பின்
புள்ளி நீழல்,
கட்டளை அன்ன வட்டு
அரங்கு இழைத்து,
கல்லாச் சிறாஅர்
நெல்லி வட்டு ஆடும்
வில் ஏர் உழவர்
வெம் முனைச் சீறூர்ச்
சுரன்முதல் வந்த
உரன் மாய் மாலை
உள்ளினென் அல்லெனோ, யானே- உள்ளிய
வினை முடித்தன்ன
இனியோள்
மனை மாண் சுடரொடு
படர் பொழுது எனவே?
பொருள்: நெஞ்சமே, ஈனுதலை உடைய பருந்து வருந்தி உறைகின்ற
வேப்ப மரம் . அம்மரம் வானத்தை மோதும் பெரிய கிளைகளையும்
பொறிந்த அடியினையும் உடையது . அந்த வேப்ப மர நிழலில் ,
வேறு தொழில் ஒன்றும் கற்று அறியாத சிறுவர்கள் பொன்னை
உரைத்து மாற்றுப் பார்க்கும் கல்லைப் போன்ற ஆடுகளத்தைக்
கீறிக்கொண்டு நெல்லிக் காய்களை
வட்டாகக் கொண்டு ஆடுவர் .
இப்பகுதி வழியே செல்வோரை
வில்லைகொண்டு அலைத்து
உண்ணும் மழவரின் வெய்ய குடியிருப்பைக் கொண்ட
சிறியவூராகும் . இவ்வூரில்
அழல் போன்று காய்கின்ற பாலை
நிலம் செல்வோரின் .
வலிமையைக் குறைக்கும் . முன்பு பொருள்
தேடி
செல்கின்ற காலத்தே இப்பாலை நிலத்தில் மாலைப்பொழுது
வருவதைக் கண்ட நிலையில் , கருதிய தொழிலை முடித்தது
போன்ற இனிமையுடைய நம் காதலி
வீட்டில் விளக்கை ஏற்றி
“அவர் இன்னும் வரவில்லையே “ என துன்புற்று இருப்பாள் என
நான் நினைத்தேன் அல்லவா ?அப்படி இருக்க இப்போதும் பொருள்
ஈட்டுமாறு ஒருப்படுத்தி நெஞ்சமே என்னை நீ வருத்ததே ,இனி
நான் வரமாட்டேன் .
கூற்று விளக்கம்: பொருள்
தேடுவதற்காகத் தலவியைப் பிரிந்த
தலைவன், மேலும் பொருள் தேட
நினைத்த நெஞ்சிற்குச் சொன்னது.
கருத்துகள்
கருத்துரையிடுக