மணிமேகலை - விழாவறை காதை


மணிமேகலை - விழாவறை காதை


உலகம் திரியா ஓங்கு உயர் விழுச் சீர்ப்


பலர் புகழ் மூதூர்ப் பண்பு மேம்படீஇய


ஓங்கு உயர் மலயத்து அருந் தவன் உரைப்ப


தூங்கு எயில் எறிந்த தொடித் தோள் செம்பியன்


விண்ணவர் தலைவனை வணங்கி முன் நின்று


'
மண்ணகத்து என்தன் வான் பதி தன்னுள்


மேலோர் விழைய விழாக் கோள் எடுத்த


நால் ஏழ் நாளினும் நன்கு இனிது உறைக' என


அமரர் தலைவன் ஆங்கு அது நேர்ந்தது


கவராக் கேள்வியோர் கடவார் ஆகலின் பழம் பெருமையும் சிறப்பும்

 

வாய்ந்தது புகார் நகரமாகும். ஒழுக்கங்களில் சிறந்து விளங்கிய மக்கள்

 

 பலரும் அந்நகரைப் போற்றுவர். பழஞ்சிறப்பு வாய்ந்த நகரின் புகழ்


மேலும் சிறப்புற வேண்டும் என்று அருந்தவ முனிவர் அகத்தியர்

 

நினைத்தார். அப்புகார் நகர் மேலும் வளமுடன் பொலிவடைய

 

 வேண்டுமானால் தேவர் தலைவனாகிய இந்திரனுக்கு இருபத்தெட்டு

 

நாட்கள் விழா எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார். அப்போது

 

புகார் நகரில் இருந்து ஆட்சி செய்த மன்னன் தூங்கு எயில்கள்

 

எனப்படும் தொங்கும் கோட்டைகளை அழித்தவனாகிய தொடித்தோட்

 

செம்பியன் ஆவான். அவனிடம் இக்கருத்தைத் தெரிவிக்க, உடனே

 

இசைவு அளித்து, விழா சிறப்புடன் நடைபெற ஏற்பாடு செய்தான்.

 

செம்பியன் வேண்டுகோளை ஏற்று இவ்விழாவில் தேவர்

 

தலைவனாகிய இந்திரனும், மற்றுமுள்ள தேவர்களும் விழாத்

 

 

தொடங்கிய இருபத்தெட்டு நாட்களிலும் புகார் நகரத்திலே வந்து

 

தங்கியிருந்தனர். கேள்வி ஞானம் உடைய சான்றோர்கள் இத்தகு

 

உயர்வு மிக்க இந்த இந்திர விழாவினைக் கொண்டாடுதலை ஒரு

 

போதும் தவறவிட மாட்டார்கள்.

 

 

 

மெய்த் திறம் வழக்கு நன்பொருள் வீடு எனும்


இத் திறம் தம் தம் இயல்பினின் காட்டும்


சமயக் கணக்கரும் தம் துறை போகிய


அமயக் கணக்கரும் அகலார் ஆகி


கரந்து உரு எய்திய கடவுளாளரும்


பரந்து ஒருங்கு ஈண்டிய பாடை மாக்களும்


ஐம் பெருங்குழுவும் எண் பேர் ஆயமும்


வந்து ஒருங்கு குழீஇ 'வான்பதி தன்னுள்

 

 இந்திரவிழாவை நடத்துவதற்காக அரசவையில் கூடி இம்மை,

 மறுமைப் பயன்களை உணர்ந்தவரும் நால்வகை உறுதிப் பொருள்களின்

 உண்மை அறிந்த வரும் ஆன சமயக் கணக்கர், காலம் கணிக்கும்

 சோதிடர், தம் தேவ உருவினை மறைத்து மனித உருவம் கொண்ட

 கடவுளர்கள், தேவர்கள, பன்மொழி பேசும் வேற்று நாட்டினர், ஐம்பெருங்

 குழுவினர், எண் பேராயத்தினர் ஆகியோர் ஒன்று கூடி விழா நடத்த

 முடிவு செய்தனர்.



கொடித் தேர்த் தானைக் கொற்றவன் துயரம்


விடுத்த பூதம் விழாக்கோள் மறப்பின்

 

 

முரசு கடிப்பு இகூஉம் முதுகுடிப் பிறந்தோன்


'
திரு விழை மூதூர் வாழ்க!' என்று ஏத்தி


'
வானம் மும் மாரி பொழிக! மன்னவன்


கோள் நிலை திரியாக் கோலோன் ஆகுக

 

வாளேந்திய வீரர்கள், தேர்ப்படையினர், குதிரைப் படையினர்,

யானைப் படையினர் ஆகிய நால்வகைப் படையினரும் சூழ்ந்து

வந்து கொண்டிருக்க, முதுகுடிப் பிறந்த வள்ளுவன் (முரசறைவோன்)

வச்சிரக் கோட்டத்தில் உள்ள முரசினை யானையின் கழுத்திலே

ஏற்றி, குறுந்தடி கொண்டு முரசறைந்து, இந்திர விழா நடைபெற

இருப்பதனைப் புகார் நகர மக்களுக்குப் பின்வரும் செய்திகளைக்

கூறி அறிவித்தான். முதலில் திருமகள் விரும்பி உறைகின்ற

இப்புகார் நகரம் வாழ்க என்று வாழ்த்தினான். பின் மாதந்தோறும்

மூன்று முறை தவறாது மழை பொழிவதாகுக என்றான். ஞாயிறு,

திங்கள் முதலிய கோள்கள் தம் நிலையில் மாறுபடா வண்ணம்

 மன்னவன் செங்கோலனாக ஆகுக என்று அரசனை வாழ்த்தி

முரசறைந்து தெரிவித்தான்.

 

 


தீவகச் சாந்தி செய்தரு நல் நாள்


ஆயிரம்கண்ணோன் தன்னோடு ஆங்கு உள


நால் வேறு தேவரும் நலத்தகு சிறப்பில்


பால் வேறு தேவரும் இப் பதிப் படர்ந்து


மன்னன் கரிகால்வளவன் நீங்கிய நாள்


இந் நகர் போல்வதோர் இயல்பினது ஆகிப்

 

 

பொன்நகர் வறிதாப் போதுவர் என்பது


தொல் நிலை உணர்ந்தோர் துணிபொருள் ஆதலின்

 

   தீவகச் சாந்தி விழா கொண்டாடப்படும் நன்மையுடைய நாட்களிலே

 ஆயிரம் கண்களை உடைய இந்திரன் தலைமையாக வீற்றிருப்பான்.

 அவ்விடத்திலே வசுக்கள் எண்மர், ஆதித்தர் பன்னிருவர், உருத்திரர்

 பதினொருவர், மருத்துவர் இருவர் ஆகிய முப்பத்து மூவர் எனப்படும்

 நால்வகைத் தேவர்களும், பல பிரிவினரான தேவ கணத்தினர்

 பதினெண்மரும் உடனிருந்து விழாவினைச் சிறப்புச் செய்வர். மன்னன்

 கரிகால் வளவன், பகைவரை வெல்லக் கருதி, வடதிசை நோக்கிப்

 போயினான். அந்நாளிலே இப்புகார் நகரம் வெறுமையாகிப்

 பொலிவிழந்து போயிற்று. அதுபோலத் தேவர் கோமானின்

 பொன்னகரமான இந்திரலோகமும் இந்திர விழா நாளில் வறிதாகிப்

 போகும் தன்மையில் தேவர்கள் இப்புகார் நகருக்கு வந்து விடுவர்.

 இவ்விழாவினைக் குறித்துப் பழைய நிலையினை உணர்ந்த

 சான்றோர்கள் முடிவாகக் கூறிய, பொருள் பொதிந்த சொற்கள் ஆகும்.


தோரண வீதியும் தோம் அறு கோட்டியும்

பூரண கும்பமும் பொலம் பாலிகைகளும்

பாவை விளக்கும் பல உடன் பரப்புமின்

காய்க் குலைக் கமுகும் வாழையும் வஞ்சியும்

பூக் கொடி வல்லியும் கரும்பும் நடுமின்

பத்தி வேதிகைப் பசும் பொன் தூணத்து

முத்துத் தாமம் முறையொடு நாற்றுமின்

விழவு மலி மூதூர் வீதியும் மன்றமும் 

பழ மணல் மாற்றுமின் புது மணல் பரப்புமின்

கதலிகைக் கொடியும் காழ் ஊன்று விலோதமும்

மதலை மாடமும் வாயிலும் சேர்த்துமின்

நுதல் விழி நாட்டத்து இறையோன் முதலா

பதி வாழ் சதுக்கத்துத் தெய்வம் ஈறு ஆக

வேறுவேறு சிறப்பின் வேறுவேறு செய்வினை

ஆறு அறி மரபின் அறிந்தோர் செய்யுமின்

தண் மணல் பந்தரும் தாழ்தரு பொதியிலும்

புண்ணிய நல்லுரை அறிவீர்! பொருந்துமின்

ஒட்டிய சமயத்து உறு பொருள் வாதிகள்


 

பட்டி மண்டபத்து பாங்கு அறிந்து ஏறுமின்

 பற்றாமாக்கள் தம்முடன் ஆயினும்

செற்றமும் கலாமும் செய்யாது அகலுமின்

வெண் மணல் குன்றமும் விரி பூஞ் சோலையும்

தண் மணல் துருத்தியும் தாழ் பூந் துறைகளும்

தேவரும் மக்களும் ஒத்து உடன் திரிதரும்

நால் ஏழ் நாளினும் நன்கு அறிந்தீர் என

  குளிர்ந்த மணல் பரப்பிய பந்தல்களிலும் நிழல் தரும் மரங்களின் கீழ்

 அமைந்துள்ள ஊர்ப் பொதுவிடங்களிலும், புண்ணிய நல்லுரைகள்

 அறிந்தவர்கள் உரையாற்றுங்கள்; தத்தம் சமயத்தில் பொதிந்த தத்துவங்கள்

 சிறந்தவை என்றால், பட்டி மண்டபத்து ஏறி வாதிட்டுப் பயன் காணுங்கள்;

 பகை மக்களோடும் பகையும், கோபமும் கொள்ளாமல் அவரை விட்டு

 அகன்று செல்லுங்கள்; வெண்மணற் குன்றுகள், பூஞ்சோலைகள், நீர்த்துறை

 ஆகிய இடங்களில் தேவர்களும் மக்களும் சமமாக உலவிக் கொண்டு

 இருங்கள், இவை அனைத்தையும் இந்திர விழா நடக்கும் இருபத்தெட்டு

நாட்களிலும் எங்கும் எல்லா இடங்களிலும் பின்பற்றுங்கள். இவ்வாறு

 செய்தி வள்ளுவன் முரசறைந்து மக்களுக்குத் தெரிவித்தான்

 

 


ஒளிறு வாள் மறவரும் தேரும் மாவும்


களிறும் சூழ்தர கண் முரசு இயம்பி


'
பசியும் பிணியும் பகையும் நீங்கி


வசியும் வளனும் சுரக்க!' என வாழ்த்தி


அணி விழா அறைந்தனன் அகநகர் மருங்கு என்

 

 

சியும், பிணியும், பகையும் நீங்கி மழையும் வளமும் எங்கும் சுரக்கட்டும்

 என முடிவில் வாழ்த்தினான். இவ்வாறெல்லாம் புகார் நகரில் உள்ள

பட்டினப்பாக்கத்துப் பகுதிகள் அனைத்திலும் விழா அணி பற்றிய

 செய்தியினை வள்ளுவன் முரசறைந்து தெரிவித்தான்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

.

  

.

 

 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்