நற்றிணை 88, யாம் செய் தொல் வினைக்கு எவன் பேதுற்றனை?

        நற்றிணை 88, யாம் செய் தொல் வினைக்கு எவன் பேதுற்றனை?

 பாடியவர் - நல்லந்துவனார்,

 

திணை -குறிஞ்சித் திணை ,

 

கூற்று- தோழி தலைவியிடம் சொன்னது,

 

பாடல்சூழல் :  வரையாது வந்தொழுகும் தலைவன் சிறைப்புறமாக இருப்பதை

 

அறிந்த தோழி, தலைவியிடம் கூறியது. 

 

பாடல்

 

யாம் செய் தொல் வினைக்கு எவன் பேதுற்றனை?

வருந்தல், வாழி தோழி! யாம் சென்று

உரைத்தனம் வருகம் எழுமதி! புணர் திரைக்

கடல் விளை அமுதம் பெயற்கு ஏற்றா அங்கு

உருகி உகுதல் அஞ்சுவல், உதுக்காண், 5

தம்மோன் கொடுமை நம் வயின் எற்றி,

நயம் பெரிது உடைமையின் தாங்கல் செல்லாது

கண்ணீர் அருவியாக

அழுமே தோழி, அவர் பழமுதிர் குன்றே.

 

பொருள் :

 

  நாம் செய்த பழைய வினை அவ்வாறு இருக்க, அதை ஆராயாது, எதற்காக

 

வருந்துகின்றாய்? வருந்தாதே!  நீடு வாழ்வாயாகத் தோழி! நாம் தலைவனிடம்

 

சென்று பேசி வருவோம்.  நீ எழுவாயாக. பொருந்திய அலைகளையுடைய

 

கடலில் விளைந்த உப்பானது மழையை ஏற்று உருகியதைப் போல் நீ

 

உருகுகின்றாய் என்று நான் அஞ்சுகின்றேன். அங்கே பார்!  தலைவன் நமக்கு

 

 இழைத்த கொடுமையை எண்ணி தன் வருத்தத்தை அடக்கிக் கொள்ள

 

முடியாது, தன்னுடைய கண்ணீரை அருவியாக வடிக்கின்றது தோழி,

 

தலைவனுடைய பழம் உதிர்கின்ற மலை.

 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்