குறுந்தொகை 8 கழனி மாஅத்து விளைந்துகு ஆலங்குடி வங்கனார்.

 

குறுந்தொகை - 8. கழனி மாஅத்து விளைந்துகு - ஆலங்குடி வங்கனார். 

 

பாடியவர்  - ஆலங்குடி வங்கனார்.

திணை - மருதம்

கூற்று - காதற் பரத்தை கூற்று

 (தலைவி தன்னை இகழ்ந்து கூறினாள் என்பதை அறிந்த காதற் பரத்தை

அத்தலைவியின் அருகில் உள்ளவர்கள்   கேட்கும்படி, “தலைவன் எமக்கு

 வயப்பட்டவன் போல இங்கே இருந்து விட்டு, தலைவியிடம்  சென்றதும்

 அவளுக்கு அடங்கி அவள் மனம்போல் ஒழுகினான் அதனால் தான்

 தருக்குற்று என்னை அவள் இகழ்ந்ததற்குக் காரணம் போலும்!’’ என்று

 கூறியது .)

 

 

கழனி மாஅத்து விளைந்துகு தீம்பழம்

பழன வாளை கதூஉ மூரன்

எம்மிற் பெருமொழி கூறித் தம்மிற்

கையும் காலும் தூக்கத் தூக்கும்

ஆடிப் பாவை போல   5

மேவன செய்யுந்தன் புதல்வன் தாய்க்கே.

 

 

வயலுக்கு  அருகில் உள்ள மா மரத்தினது கனிந்து வீழ்கின்ற இனிய

பழத்தினைப்  பொய்கையில் உள்ள வாளை மீன்கள் கவ்வி உண்ணுதற்கு

இடமாகிய ஊரை உடைய தலைவன் எம்முடைய வீட்டில்

வயமாக்குதற்குரிய பெரு மொழிகளைக்கூறிச் சென்று தம்முடைய வீட்டில்

முன் நிற்பவர்  தம் கையையும் காலையும் தூக்க தானும் தூக்குகின்ற

கண்ணாடியுள் தோன்றுகின்ற பாவையைப்போல தன்னுடைய

மனைவிக்கு அவள் விரும்பியவற்றைச் செய்வான்.

 

.    

 

  

 

 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்