குறுந்தொகை 25 யாரும் இல்லைத் தானே கள்வன் கபிலர்
குறுந்தொகை
25 யாரும் இல்லைத் தானே கள்வன் கபிலர்
பாடியவர் கபிலர்
திணை - குறிஞ்சி
கூற்று - தலைவி கூற்று
(தலைவன் நீண்ட காலம் தன்னை மணம் செய்யாமல் இருத்தல் பற்றி
தலைவி வருந்தித் தோழியிடம் கூறியது.)
யாரும் இல்லைத் தானே கள்வன்,
தான் அது பொய்ப்பின், யான் எவன் செய்கோ?
தினைத்தாள் அன்ன சிறு பசுங்கால
ஒழுகு நீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டு, தான்
மணந்த ஞான்றே. 5
பொருள் :
தலைவன் என்னைக் களவில் மணந்த காலத்தில், அங்கே
சாட்சியாகத்
தக்கார் யாரும் இல்லை. என் நலத்தை நுகர்ந்த கள்வன் அவன். அவன்
என்னிடம் கொடுத்த உறுதி மொழியிலிருந்து
தவறினால் நான் என்ன
செய்வேன்? நான் அவனோடு இருந்த நாளில், அங்கே ஓடுகின்ற
நீரில் ஆரல் மீனின் வருகையைப்
பார்த்துக் கொண்டு,
தினைத்தாளைப் போன்ற சிறிய
பசுங்கால்களையுடைய குருகு
இருந்தது.
கருத்துகள்
கருத்துரையிடுக