நற்றிணை 129 பெரு நகை கேளாய், தோழி! காதலர் - அவ்வையார் - ஔவையார்
நற்றிணை
129 பெரு நகை கேளாய், தோழி!
காதலர்
பாடியவர்
: அவ்வையார்
பெரு
நகை கேளாய், தோழி! காதலர்
ஒரு
நாள் கழியினும் உயிர் வேறுபடூஉம்
பொம்மல்
ஓதி! நம் இவண் ஒழியச்
செல்ப
என்ப, தாமே; சென்று,
தம்
வினை முற்றி வரூஉம் வரை, நம்
மனை 5
வாழ்தும்
என்ப, நாமே, அதன்தலை-
கேழ்
கிளர் உத்தி அரவுத் தலை பனிப்ப,
படு
மழை உருமின் உரற்று குரல்
நடு
நாள் யாமத்தும் தமியம் கேட்டே.
பொருள்
:
பொலிவுடைய
கூந்தலையுடைய தோழியே ! யாவரும் பெரிதும் நகைக்க
வல்ல
ஒரு செய்தி கேட்பாயாக!; காதலர் ஒரு நாள் நின்னைப் பிரியினும்
நின்
உயிரின்
தன்மை வேறுபடுகின்ற தன்மையை உடையவள் நீ
அவர்
நம்மை இங்கு நீங்குமாறு கைவிட்டுத் தாம் ஒருவரே தனியாய்
வினைவயிற்
செல்லக் கருதி உள்ளாரம் ; அவர்
தனியே சென்று
தமது
வினை முடித்து வருமளவும்; நிறம் விளங்கிய படப் பொறியையுடைய
பாம்பினது
தலை நடுங்கும்படி பெய்கின்ற மழையிடையிட்ட
இடியினது
முழக்கத்தை நாம் இரவு நடுயாமத்துந் தனியாய் இருந்து கேட்டு
நமது மனையின் கண்ணே உயிர் வாழந்திருக்க வேண்டுமென்று
கூறுவாராம்.
இஃதென்ன
கொடுமை காண்!
கூற்று :
பிரிவு உணர்த்தப்பட்ட தோழி, தலைமகளை முகம் புக்கது.
தலைவனின்
வினைவயின் பிரிவை அறிந்துகொண்ட தோழி தலைவி
ஏற்றுக்கொள்ளுமாறு எடுத்து உரைத்தது .
நன்றி : tvu library
கருத்துகள்
கருத்துரையிடுக