நற்றிணை 110, பிரசம் கலந்த வெண்சுவைத் தீம் பால்

 

நற்றிணை 110, பிரசம் கலந்த வெண்சுவைத் தீம் பால்

 

பாடியவர் - போதனார்

 

பிரசம் கலந்த வெண்சுவைத் தீம் பால்

விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்திப்,

புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறு கோல்

உண்’ என்று ஓக்குபு புடைப்ப தெண் நீர்

முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று,  5

அரி நரைக் கூந்தல் செம் முது செவிலியர்

பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி,

ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி

அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல்,

கொண்ட கொழுநன் குடி வறன் உற்றெனக்  10

கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள்,

ஒழுகு நீர் நுணங்கு அறல் போல,

பொழுது மறுத்து உண்ணும் சிறு மதுகையளே?

 

 

 

கூற்று : மனைமருட்சி (நற்றாய் உடன்போக்கு மேற்கொண்ட மகளை

எண்ணி வருந்தி உரைத்தது. ) 2. மகள்நிலை உரைத்ததூஉம் ஆம். (மணம்

நிகழ்ந்தபின் தலைவியின் இல்லச் சிறப்பினைக் கண்டு வந்து விவரித்த

செவிலித்தாயிடம் நற்றாய் உரைத்தது.)

 

 

 

பொருள் :

தேன் கலந்த வெண்மையான , சுவையுடைய  இனிய பாலைக் கொண்ட

விரிந்த ஒளியையுடைய பொற்கலத்தை ஒரு கையில் ஏந்தியவண்ணம்,

 மென்மையான நுனியைக் கொண்ட பூக்கள் சுற்றப்பட்ட சிறிய கோலை

உயர்த்தி என் மகளை அச்சமூட்டிக் ‘ இதைக் குடி’ என்று அவளுடைய

மென்மையான  நரைத்த கூந்தலையுடைய செவ்விய  முது செவிலித்

தாயார்கள் கூறுகிறார்கள் . அதனை மறுத்துத் தெளிந்த நீரின் முத்துக்கள்

பரலாக உள்ள தன்னுடைய பொற்சிலம்புகள் ஒலிக்கப் பாய்ந்து அவள்

ஓடுவாள் . நடைத் தளர்ந்து அவள் பின்னால் ஓட முடியாமல் அவர்கள்

இருக்க, அவள் எங்கள் இல்லத்திற்கு முன் இருக்கும் பந்தலுக்கு ஓடி

விடுவாள்.  இவ்வாறு பாலைக் குடிக்க மறுத்த என்னுடைய விளையாட்டுப்

பெண், இப்பொழுது அறிவையும் ஒழுக்கத்தையும்  எவ்வாறு அறிந்தாள்?

திருமணம் புரிந்த கணவனின் குடும்பத்தில் வறுமை ஏற்பட்டதால்,

அவளுடைய தந்தைகொடுத்த செல்வமிக்க உணவை மறுத்து, நீர் இருக்கும்

 பொழுது நனைந்து பின் நீர் இல்லாத பொழுது உலரும் நுண்ணிய மணல்

போல, ஒரு பொழுதின்றி ஒரு பொழுது உண்ணும் சிறிய

ஆக இப்பொழுது இருக்கின்றாள்.

 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்