நற்றிணை 10 அண்ணாந்து ஏந்திய வன முலை தளரினும் natrinai 10

 

நற்றிணை 10 


பாடியவர் பெயர் :கிடைக்கவில்லை

 

திணை – பாலை

 

கூற்று: தோழி தலைவனிடம் கூறியது


அண்ணாந்து ஏந்திய வன முலை தளரினும்,


பொன் நேர் மேனி மணியின் தாழ்ந்த


நல் நெடுங்கூந்தல் நரையொடு முடிப்பினும்,


நீத்தல் ஓம்புமதி, பூக்கேழ் ஊர!


இன் கடுங்கள்ளின் இழை அணி நெடுந்தேர்க்  5


கொற்றச் சோழர் கொங்கர்ப் பணீஇயர்


வெண்கோட்டு யானைப் போஒர் கிழவோன்

பழையன் வேல் வாய்த்தன்ன, நின்


பிழையா நன் மொழி தேறிய இவட்கே.

 

தலைவி விரும்பியவாறு தோழி இருவரையும் ஒருப்படுத்தி, தலைவியை தலைவன்பால் சேர்த்து, ‘இவளை நன்றாக பாதுகாப்பாயாக’ என்று தலைவனிடம் கூறியது.   

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முத்தொள்ளாயிரம்- சேரர் - சோழர் - பாண்டியர்

பாரதியார் - பாரத சமுதாயம்

குற்றாலக் குறவஞ்சி - குறத்தி மலைவளம் கூறுதல்- பொருள்- விளக்கம்